மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கை பின்னுக்குத்தள்ளி நார்வே முதலிடம்: இந்தியாவுக்கு 122-வது இடம்

தினகரன்  தினகரன்

உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக நார்வே தேர்வாகியுள்ளது. இதில் இந்தியாவுக்கு 122-வது இடமே கிடைத்துள்ளது. உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட்டதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் தனி நபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சி்க்கான அளவு கோலாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையி்ல் 155 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கை பின்னுக்கு தள்ளி நார்வே நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தில் டென்மார்க்கும், 3, 4, மற்றும் 5-வது இடங்களில் ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன் நாடுகளும் உள்ளன. மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட 42 இடங்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தான 80-வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 122-வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த 118-வது இடத்திலிருந்து 4 இடங்கள் பின்தங்கியுள்ளது. தெற்கு சூடான், லைபீரியா, ருவான்டா, தான்சானியா, ஃப்ரூன்டி மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளவையாகும்.

மூலக்கதை