ஏழு புதிய கோள்கள்: கண்டுபிடித்தது 'நாசா'

தினமலர்  தினமலர்
ஏழு புதிய கோள்கள்: கண்டுபிடித்தது நாசா

வாஷிங்டன்: பூமியை போல ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'இதில் மூன்று கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்றதாக உள்ளது' என, அமெரிக்க விணவெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா' அறிவித்துள்ளது.
சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் 'நாசா' ஆய்வு நடத்தியது. இதற்காக நேரலை ஒளிபரப்பு செய்தது.இதில் 'ஸ்பிட்சர்' மூலம் பூமியை போல ஏழு புதிய கோள்கள் கொண்ட புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது.புதிய மைல் கல்: இதில், மூன்று கோள்களில் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இக்கோள்கள் பூமியில்இருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் அமைந்துள்ளன.'நாசா'வின் நேரலையை ஆறு கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தனர். இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என கருதப்படுகிறது.

மூலக்கதை