அமெரிக்காவில் நுழைய பிரித்தானியருக்கு அனுமதி மறுப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்காவில் நுழைய பிரித்தானியருக்கு அனுமதி மறுப்பு!

 அமெரிக்காவுக்கு பயணிக்க பிரித்தானியா ஆசிரியர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வேல்ஸ் பகுதியை சேர்ந்த Juhel Miah என்ற முஸ்லிம் ஆசிரியருக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
கணித ஆசிரியரான Juhel Miah, பள்ளி குழந்தைகளுடன் நியூயார்க் நகரத்திற்கு சுற்றுலா செல்ல விமானத்தில் ஏறியுள்ளார். அப்போது, விமானம் புறப்படும் முன் பாதுகாப்பு அதிகாரிகள் Juhel Miahஐ விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
 
இதுகுறித்து Juhel Miah கூறியதாவது, என்னை எதற்காக வெளியேற்றினார்கள் என்பதை கண்டிப்பாக விளக்க வேண்டும். அதுவரை நான் விட மாட்டேன்.
 
என்னை விமானத்திலிருந்து வெளியேற்றும் போது குழந்தைகள் உட்பட அனைவரும் என்னை பார்த்தனர். அது மிகவும் வருத்தமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
 
இச்சம்பவம் குறித்து அடியில் போர்ட் டால்போட் கவுன்சிலும் விளக்கம் கேட்டுள்ளது.
 
7 முஸ்லிம் நாடுகள் மீதான தடை உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்து. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய தடையை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Juhel Miah பிரித்தானியாவை சேர்ந்தவர் என்றாலும் அவரது குடும்பத்தினர் வங்கதேசத்தில் வசித்து வருகின்றனர். ஆனால், டிரம்ப் தடை செய்த 7 முஸ்லிம் நாடுகள் பட்டியலில் வங்கதேசம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை