பருவமழை பெய்யாததால் இலங்கையில் கடும் வறட்சி: 100 டன் அரிசி வழங்கியது இந்தியா

தினகரன்  தினகரன்

கொழும்பு: பருவமழையின்றி கடும் வறட்சி நிலைமைக்கு தள்ளப்பட்ட இலங்கைக்கு 100 டன் அரிசியை இந்தியா வழங்கியுள்ளது. பருவமழை பெய்யாததால் அங்குள்ள அணைகளில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு நீர் மட்டம் குறைந்துள்ளது. 8 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலை மாறி வெறும் 3 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் அங்கு அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியா சார்பில் 100 டன் அரிசியும், 8 டேங்கர் குடிநீரும் வழங்கப்பட்டது. மேலும் இம்மாத தொடக்கத்தில் இலங்கைக்கு25 டன் அரிசியை  பாகிஸ்தான் நிவாரண உதவியாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை