சீன போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலில் பயிற்சி

தினகரன்  தினகரன்

பெய்ஜிங்: சீன செய்தி நிறுவனம் ஒன்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கிழக்கு இந்திய பெருங்கடலில் சீன போர்க்கப்பல்கள் ஆழ்கடல் போர் ஒத்திகையில் ஈடுபட்டன’ என்று கூறியுள்ளது. மேலும், சீன போர்க் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடும் 4 படங்களையும் அதில் வெளியிட்டுள்ளது. அதே சமயம் சீன அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சீன ராணுவம் 2015ம் ஆண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அதில் தனது எல்லைக்கு அப்பால் திறந்த வெளி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என அறிவித்தது. அது முதல் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது இருப்பை அதிகரித்து வருகிறது. இலங்கையின் கொழும்பு  மற்றும் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகங்களில் சீன கப்பல்கள் நடமாட்டம் கொண்டு வரப்படுவது, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கவே என்று கூறப்படுகிறது.

மூலக்கதை