அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மெக்மாஸ்டர் நியமனம்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பிளினை நியமித்திருந்தார். ஆனால் அவர் அமெரிக்க விதிமுறைகளை மீறி ரஷ்ய தூதருடன் கலந்துரையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனால் மிகுந்த சர்ச்சைகள் எழுந்த நிலையில் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை மைக்கேல் பிளின் ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராணுவ லெப்டினனட் ஜெனரல் ஹெர்பர்ட் ரேமாண்ட் மெக்மாஸ்டரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

மூலக்கதை