அமெரிக்க வின்வெளி ஆய்வு அமைப்பான நாசா நாளை உலகிற்கு முக்கிய அறிவிப்பு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: வின்வெளி ஆய்வு அமைப்பான நாசா நாளை ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக அறிவித்தது. அமெரிக்க நேரப்படி பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் கூட நாசா விஞ்ஞானிகளிடம் கேள்வி கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாசா அறிவிக்கும் புதிய தகவல் எதைப்பற்றி என்ற விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. நாசா புதிய கண்டுபிடிப்பு Nature இதழிலும் வெளியாகும். நாசா இத்தகவலை reddit தளத்தில் வெளியிட்டதும் அதன் கமெண்ட் பகுதி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் அது என்ன கண்டுபிடிப்பாக இருக்கும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள். புதிய கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளதா அல்லது புதிய நட்சத்திரங்களை கண்டுபிடித்து்ள்ளதா, இல்லை புதிய சூரியன் ஒன்றையை கண்டுபிடித்துவிட்டதா போன்ற கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றன.

மூலக்கதை