ஆஸ்திரேலியாவில் விமான விபத்து: 5 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலியாவில் விமான விபத்து: 5 பேர் பலி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் விமானம் வணிக வளாகத்தில் மோதி வெடித்து சிதறியதில் 5 பேர் பலியானார்.மெல்போர்னில் உள்ள எசண்டன் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இரண்டு இன்ஜின்கள் கொண்ட பீச்கிராப்ட் சூப்பர் கிங் என்ற சிறிய விமானம் கிளம்பியவுடன், விமான நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம்மீது மோதி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 5 பேர் பலியானார்கள்.

இன்ஜின் கோளாறு :

வணிக வளாகத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் மோதியதி்ல் வணிக வளாகம் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மூலக்கதை