சாப்பிடும்போது குறுஞ்செய்தி அனுப்பாதீர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
சாப்பிடும்போது குறுஞ்செய்தி அனுப்பாதீர்கள்!

 குடும்பத்தினருடன் உணவு உண்ணும்போது கைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என இளையர்களுக்கு போப் ஃபிரான்சிஸ் அறிவுரை கூறியுள்ளார்.

 
மேசையில் அமர்ந்து மற்றவர்களுடன் தொலைபேசியில் பேசுவது, போர் தொடங்குவதற்கான ஆரம்பம் என அவர் சொன்னார்.
 
“Roma Tre” பொதுப் பல்கலைக்கழகத்தில் பேசுகையில் போப் அவ்வாறு கூறினார்.
 
இன்றைய தலைமுறையினரின் நடவடிக்கைகளை அவர் குறைகூறினார்.
 
பேசும் தொனியைச் சற்று குறைத்துக்கொள்ள வேண்டும்; அளவாகப் பேச வேண்டும்; அதிகமாக கேட்கவேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் தெரிவித்தார்.
 
உறவுகளுக்கிடையே நெருக்கத்தைக் கொண்டுவர உதவும் உரையாடல், வன்முறைக்கு எதிரான மருந்து என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை