மலேஷிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்

தினமலர்  தினமலர்
மலேஷிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்

சிட்னி: மூன்று ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன, மலேஷியா விமானத்தை தேடும் பணி கைவிடப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம், 2014, மார்ச், 8ல், 239 பேருடன், தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு, சீனத் தலைநகர் பீஜிங் சென்றது. சிறிது நேரத்தில், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு, அந்த விமானத்தில் இருந்து, 'சிக்னல்' வராததை அடுத்து, விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, மலேஷியா, சீனா அரசுகள் ஈடுபட்டன. இந்திய பெருங்கடல் பகுதியில், தேடுதல் வேட்டை நடந்தது. மூன்று ஆண்டுகளாக தேடுதல் வேட்டை நடந்த பின்னும், விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துவதாக, ஆஸ்திரேலியா, மலேஷியா, சீனா நாட்டு அரசுகள், நேற்று அறிவித்துள்ளன.

மூலக்கதை