பிரித்தானிய பொலிசாரின் முக்கிய வேண்டுகோள்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானிய பொலிசாரின் முக்கிய வேண்டுகோள்!

 இரயில் பயணத்தின் போது ஆபாச படம் பார்த்து தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக பிரித்தானிய பொலிசார் களமிறங்கி உள்ளனர்.

 
பிரித்தானியாவில் இரயில் பயணத்தின் போது மொபைல் போன்களில் ஆபாச படம் பார்ப்பது அதிகரித்து வருகிறது.
 
இந்த சமயத்தில் அருகில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம சங்கட நிலைக்கு ஆளாகின்றனர்.
 
இது தொடர்பாக புகார்கள் குவிந்து வந்த நிலையில், பொலிசார் நடவடிக்கை எடுக்க தயாராகி உள்ளனர்.
 
ரயில் பயணத்தின் போது இது போன்ற செயல்களை முழுவதும் தடுக்க 61016 என்ற நம்பரை பொதுமக்கள் பயன்படுத்துமாறு பிரித்தானிய பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்த நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாலே சமந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

மூலக்கதை