காஷ்மீரில் வைரலாக பரவுகிறது - தீவிரவாதியுடன் மோடி மோதும் வீடியோ கேம் ; போலீசார் தீவிர விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் வைரலாக பரவுகிறது  தீவிரவாதியுடன் மோடி மோதும் வீடியோ கேம் ; போலீசார் தீவிர விசாரணை

காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பர்கான் வானியுடன், பிரதமர் மோடி மோதுவது போன்ற வீடியோ கேம்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பர்கான் வானி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அங்கு கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது.

வன்முறை, துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவங்களால் 100க்கும் அதிகமானோர் பலியாயினர். அங்கு தொடர்ந்து ஊரடங்கு, கடையடைப்பு என பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பர்கான் வானியை ஹீரோவாக சித்தரித்து மோடியை வில்லனாக சித்திரித்து ஆன்ட்ராய்டு செல்போன்களில் இயங்கும் வகையிலான வீடியோக கேம்கள் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி பரவி வருகிறது.

மோடி போன்ற உருவம் கொண்ட கதாபாத்திரங்களை வெற்றி பெற்றால் புள்ளிகள் கிடைப்பது போலவும் இதன் மூலம் வெற்றி இலக்கை அடைய முடியும் என்பது போலவும் அதில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் வைரலாக செல்போன்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ கேம் சாப்ட்வேர் ரகசியமாக ஹேக்கர்களால் தயாரிக்கப்பட்டு செல்போன்களில் உலவ விடப்பட்டிருக்கலாம் என உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த விவகாரம் குறித்து காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோ கேம் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக கிடைக்கவில்லை என்ற போதிலும் இளைஞர்கள் செல்போன்களில் பரிமாற்றம் செய்வது உளவுத்துறையினரை திணறச் செய்து வருகிறது.

.

மூலக்கதை