பெல்ஜியம் குற்றவியல் நிறுவனத்துக்கு தீ வைப்பு பயங்கரவாதிகள் கைவரிசையா?

தினத்தந்தி  தினத்தந்தி
பெல்ஜியம் குற்றவியல் நிறுவனத்துக்கு தீ வைப்பு பயங்கரவாதிகள் கைவரிசையா?

பிரசல்ஸ்,

பெல்ஜியம் நாட்டின் தேசிய குற்றவியல் நிறுவனம் பிரசல்ஸ் நகரில் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இங்கு புகுந்த மர்மநபர்கள் அங்குள்ள ஆய்வகத்துக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதால் சிறிது நேரத்தில் அந்த ஆய்வகம் வெடித்துச் சிதறியது.  இதைத்தொடர்ந்து அங்கு 30–க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து தீயணைக்கும் வண்டிகளில் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.

இதுபற்றி பிரசரல்ஸ் அரசு வக்கீல் இனே வான் வைமெர்ச் கூறும்போது, ‘‘மர்ம நபர்கள் ஆய்வகத்துக்கு தீ வைத்தபோது அங்கு யாரும் இல்லை. ஆய்வகத்துக்கு வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டு உள்ளது. தீ வைத்தவர்கள் வெடிபொருட்களை வீசவும் இல்லை. அங்கு வெடிபொருட்களை வைக்கவும் இல்லை. இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதை மறுக்க இயலாது’’ என்றார்.

பாரீஸ் மற்றும் பிரசல்ஸ் நகரங்களில் கடந்த ஓராண்டாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதால் பெல்ஜியம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இந்த தீ வைப்பு சம்பவம் நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மூலக்கதை