கூட்டணி முறிவு: இத்தாலி பிரதமர் ராஜினிமா

தினமலர்  தினமலர்
கூட்டணி முறிவு: இத்தாலி பிரதமர் ராஜினிமா

ரோம்: கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ் பெற்றதால் இத்தாலி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி பைவ் ஸ்டார் இயக்கம் கட்சி , வலது லீக் கட்சி உடன் இணைந்து கடந்த 14 மாதங்களுக்கு முன் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பிரதமராக இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே உள்ளார். துணை பிரதமராக வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி உள்ளார்.
சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே கருத்துவேறுபாடு நிலவியதையடுத்து, ஆதரவை திரும்ப பெற்று கூட்டணியில் இருந்து விலகுவதாக மேட்டியோ சால்வினி அறிவித்தார்.இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டே பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் கான்டாவுக்கு பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடித்தை அதிபர் செர்ஜியோ மெட்டரில்லாவிடம் அளித்தார்.

மூலக்கதை