9 நர்ஸ்களும் குழந்தைகளும்

தினமலர்  தினமலர்
9 நர்ஸ்களும் குழந்தைகளும்

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ள மெடிக்கல் மையத்தில் பணிபுரியும் ஒன்பது நர்ஸ்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர். அப்போது அந்த மருத்துவமனை 'எங்கள் மையத்தில் ஒரே நேரத்தில் கர்ப்பமான ஒன்பது நர்ஸ்களுக்கும் ஏப். - ஜூலையில் குழந்தை பிறக்கபோகிறது' என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது. இப்போது அனைவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளதால் இப்படத்தையும் இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை