இந்தியா வளர்ந்த நாடு: டிரம்ப் கணிப்பு

தினமலர்  தினமலர்
இந்தியா வளர்ந்த நாடு: டிரம்ப் கணிப்பு

பென்சில்வேனியா: இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பென்சில்வேனியாவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை இனியும் வளரும் நாடுகள் அல்ல. அதனை கூறிக்கொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிக்கக் கூடாது. ஆனால், இரண்டு நாடுகளும், வளரும் நாடுகள் எனக்கூறிக்கொண்டு, சலுகைகளை அனுபவித்து வருகின்றன. இதனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றன.



உலக வர்த்தக மையம், அமெரிக்காவை சமமாக நடத்த வேண்டும். இந்தியா, சீனாவை வளர்ந்த நாடுகளாக பார்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளும் உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவிப்பதை அமெரிக்கா அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை