அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழக கவுன்சில் மாணவர் தலைவராக இந்தியப்பெண் தேர்வு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலின் தலைவராக இந்தியப் பெண் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை இளம்பெண் தேர்வுஅமெரிக்காவில் வசித்து வருபவர் ஸ்ருதி பழனியப்பன் (20). இவரது பெற்றோர் சென்னையில் இருந்து கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினர்.

இந்த நிலையில், ஹார்ட்வர்ட் பல்கலைக் கழகத்தின் இளங்கலை கவுன்சில் மாணவர் அமைப்பின் தலைவராக ஸ்ருதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை தலைவராக ஜூலியா ஹீயூசா (20) தேர்வாகி உள்ளார்.

ஸ்ருதியும், ஜூலியாவும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட நதினி, அர்னவ் அக்ரவால் ஆகியோருக்கு எதிராக 41.5 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். மாணவர் அமைப்பின் தலைவராகி உள்ள ஸ்ருதி, தற்போது கவுன்சிலின் கல்விக் குழுவில் இடம் பெற்று உள்ளார்.

மூலக்கதை