'பிரெக்சிட்' பணிகள் துவக்கம்

தினமலர்  தினமலர்

புருசெல்ஸ்: ஐரோப்பிய நாடுகள் இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளுக்காக, 28 நாடுகள் இணைந்து, ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற, பிரிட்டன் முடிவு செய்தது.அடுத்தாண்டு, மார்ச், 29ம் தேதியில் இருந்து, யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. இதற்காக, அதில் உள்ள, பிற, 27 நாடுகளுடனும், பிரிட்டன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.முதல் கட்டமாக, பிரிட்டன் மற்றும் யூனியனில் உள்ள நாடுகளின் அமைச்சர்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை