'அமெரிக்கா முட்டாள் அல்ல' : பாகிஸ்தானுக்கு டிரம்ப் கண்டனம்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்க அமெரிக்கா முட்டாள் அல்ல டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார்.பயங்கரவாதிகளை அழிப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டவில்லை எனக்கூறி அந்த நாட்டிற்கான 1.3 பில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்க அரசு நிறுத்தியது. இது குறித்த விமர்சனங்கள் அண்மையில் அதிகரித்து வந்த நிலையில் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது:

கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்கள் உதவி செய்துள்ளோம். ஆனால் பாகிஸ்தான் எந்த உதவியும் செய்யவில்லை. அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய தீவிரவாதி குடும்பத்துடன் தனது நாட்டில் தங்கியிருந்தது தெரியாது என பாகிஸ்தான் கூறுவதை நம்ப அமெரிக்கா முட்டாள் அல்ல. பயங்கரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் உள்ளது. எங்களிடம் நிதி பெற்றுக்கொண்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அது இனி நடக்காது. இவ்வாறு கூறினார்.

மூலக்கதை