அமெரிக்கா தீ : 1,000 பேர் மாயம்

தினமலர்  தினமலர்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நவ., 8- முதல் பரவி வரும் காட்டுத் தீயால் மாயமானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.இந்தக் காட்டுத் தீயில் 631 பேர் மாயமானதாக நவ.,15ல் அறிவிக்கப்பட்டது. மேலும் 380 பேரைக் காணவில்லை என தகவல்கள் வந்துள்ளதால் அந்த எண்ணிக்கை 1,011-ஆக அதிகரித்துள்ளது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி மேலும் 8 பேர் பலியானதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை