பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு - பிரிட்டனில் 4 அமைச்சர்கள் விலகல்

தினமலர்  தினமலர்
பிரெக்சிட் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு  பிரிட்டனில் 4 அமைச்சர்கள் விலகல்

லண்டன்: 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிராக 48.11 சதவீத மக்கள் வாக்களித்தனர். இது 'பிரெக்சிட்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. அதனை பார்லி.யில் தாக்கல் செய்து பிரதமர் தெரசா மே விவாதம் நடத்தினார். ஆனாலும் பல மந்திரிகள் இந்த வரைவு ஒப்பந்தத்துக்கு எதிராக பேசியதாகவும் இதில் 4 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.

மூலக்கதை