பிரெக்சிட் உடன்படிக்கையை வெளியிட்டது ஐரோப்பிய யூனியன்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெக்சிட் உடன்படிக்கையை வெளியிட்டது ஐரோப்பிய யூனியன்!

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர்.
 
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர்  தெரசா மே சமர்ப்பித்த வரவு தொடர்பாக 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது. 
 
வெளியேற்றத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையினான எதிர்கால நிதி பரிமாற்றம், பாதுகாப்பு, விசா மற்றும் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 
 
மேலும், இனி செயல்பாட்டுக்கு வரும் பிரிட்டன் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாகவும் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை  ஐரோப்பிய யூனியனும் பிரிட்டன் அரசும்  இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன.
 
லண்டன் பாராளுமன்றமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த தலைவர்களும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை