5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்! அசத்தும் அலிபாபா

PARIS TAMIL  PARIS TAMIL
5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்! அசத்தும் அலிபாபா

5 நிமிடத்தில் ரூ,20,000 கோடிக்கு விற்பனை செய்து ஆன்லைன் பிஸ்னஸ்சில் புதிய சாதனை படைத்துள்ளார் அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா.
 
சீனவை சேர்ந்த அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா. சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்நிறுவனம் முதல் இடத்தை வகிக்கிறது. அலிபாபா நிறுவனம் எப்போதும் 11 ஆம் மாதத்தில் வரும் 11 ஆம் தேதியில் பல சலுகைகளை வழங்குவது வழக்கம். இந்த சலுகை டபுள் 11 என்று அழைக்கப்படுகிறது. 
 
அந்த வகையில் நேற்றும் சலுகைகள் வழங்கபப்ட்டது. இந்த விற்பனை துவங்கியதும் சீனா முழுக்க உள்ள பல கோடி மக்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் விறபனை துவங்கிய முதல் 5 நிமிடத்திகேயே ரூ. 20,000 கோடியை லாபம் கிடைத்தது. 
 
அடுத்த 1 மணி நேரத்தில் ரூ.70,000 கோடி வரை விற்பனை அள்ளியது. சென்ற வருடம் இதேபோன்ற விற்பனையின் போது அலிபாபா நிறுவனம் ரூ.1.8 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டியது. இம்முறை இதைவிட பன்மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறே 30 பில்லியனை 24 மணி நேரத்தில் சம்பாதித்துள்ளது. இந்த விற்பனையின் போது ஆப்பிள் மற்றும் சியோமி நிறுவன பொருட்கள் அதிகளவில் விற்பனையாகின என்ற கூடுதல் தலவலும் வெளியிடப்பட்டுள்ளது. 

மூலக்கதை