அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நிருபர் வாக்குவாதம்

தினமலர்  தினமலர்
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நிருபர் வாக்குவாதம்

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப்பிற்கும் சி.என்.என்., நிருபர் ஜிம் அகோஸ்டாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.


வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின் போது சி.என்.என்., தொலைக்காட்சியின் செய்தியாளர் அகோஸ்டா, அகதிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், அமெரிக்காவை ஆட்சி செய்ய விடுமாறு செய்தியாளரிடம் கூறினார். இதன் பிறகும் அகோஸ்டோ தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்றார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், கேள்வி எழுப்பியது போதும்எனக்கூறி, அமருமாறு அகோஸ்டாவை வலியுறுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றதால் ஒரு கட்டத்தில் பதில் அளிக்க மறுத்து டிரம்ப் நகர்ந்து சென்றார். பின்னர் திரும்பி வந்த டிரம்ப் அகோஸ்டாவை பார்த்து மக்களின் எதிரி என்று விமர்சித்தார்.


இதனை தொடர்ந்து அதிபரின் செய்தியாளர் சந்ததிப்புகளுக்கு அகோஸ்டாவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜிம் அகோஸ்டா தன்னை தடுக்க முயன்ற வெள்ளை மாளிகை பெண் ஊழியர் மீது கை வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.இதனை மறுத்துள்ள அகோஸ்டா, தன் கையிலிருந்து மைக்கை பறிக்க முயன்ற ஊழியரை தடுத்ததாக பதிலளித்துள்ளார்.

மூலக்கதை