சர்வதேச அளவில் இந்திய பாஸ்போர்ட் உபயோகித்து விசா இல்லாமல் 66 நாடுகளுக்கு செல்லலாம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சர்வதேச அளவில் இந்திய பாஸ்போர்ட், மதிப்புமிகு பாஸ்போர்ட் வரிசையில் உள்ளதால் விசா இல்லாமல் 66 நாடுகளுக்கு செல்லலாம்.

சர்வதேச அளவில், மதிப்புமிகு பாஸ்போர்ட் களை வைத்துள்ள நாடுகளின் பட்டியல், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம், எத்தனை நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியுமோ, அதன் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இதன்படி, இந்த ஆண்டு வெளியான பட்டியலில், ஆசிய நாடான சிங்கப்பூர், தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம், 165 நாடுகளுக்கு, விசா இன்றி பயணிக்க முடியும். இதற்கு அடுத்த இடங்களில், ஐரோப்பிய நாடான,ஜெர்மனி, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகியவை உள்ளன.

இந்த வரிசையில், .இந்திய பாஸ்போர்ட் மூலம், 66 நாடுகளுக்கு, விசா இன்றி பயணிக்க முடியும். இந்த பட்டியலில், தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தான், கடைசி இடமான, 91வது இடத்தில் உள்ளது.இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளோர், எந்தெந்த நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்கிற விபரம், வெளியிடப் படவில்லை.

மூலக்கதை