சூரியனை நெருங்கியது அமெரிக்க நாசா மையம் அனுப்பிய விண்கலம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவிய ‘பார்கர்’ என்ற விண்கலம்  சூரியனை  நெருங்கியது. 

இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; 

கடந்த 1976ம் ஆண்டு ஏப்ரலில் ஜெர்மன்-அமெரிக்கா தயாரிப்பான ‘ஹீலியஸ்-2’ என்ற விண்கலம்தான் சூரியனை நெருங்கி ஆய்வு செய்த முதல் விண்கலம் என்ற பெருமையைப்  பெற்றிருந்தது. அப்போது, அந்த விண்கலம் 42.73 மில்லியன் கிமீ தூரம் வரை சூரியனை நெருங்கிச் சென்று ஆய்வு செய்தது. 

இதன் வேகம் மணிக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 960 கிமீ ஆக இருந்தது. ஆனால், நாசா கடந்த ஆகஸ்டில் அனுப்பிய பார்கர் விண்கலம், இந்த தூரத்தையும் கடந்து சூரியனுக்கு இன்னும் நெருக்கமாக சென்று சாதனை படைத்துக்  கொண்டு இருக்கிறது. சூரிய வெப்ப அலையில் இருந்து பூமியை பாதுகாப்பது குறித்து அடுத்த 7 ஆண்டுகள் பார்கர் ஆய்வு செய்யும்.

 இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

மூலக்கதை