அமெரிக்காவில் வெளிநாட்டினர் குழந்தை பெற்றால் கிடைத்த குடியுரிமை ரத்து: அதிபர் டிரம்ப் திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர். அங்கு குழந்தை பெற்றதைக் காரணம் காட்டி குடியுரிமை பெறும் முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். 

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு முக்கிய வேலைகளில்  வெளி நாட்டினர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் சில காலம் அங்கு வசித்த பிறகு குடியுரிமை கோரி பெறுகின்றனர். 

சிலர், குறுக்கு வழியைக் கையாள்கின்றனர். அதாவது, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர் தாங்கள் குடியுரிமை பெறாவிட்டாலும் கூட, அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அதை சாக்காக வைத்து அவர்களுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடும். 

அமெரிக்காவில் தற்போதுள்ள சட்ட விதிகள் இதை அனுமதிக்கின்றன. இதன்படி, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அமெரிக்காவில் குழந்தை பெற்றால் உடனே அமெரிக்கக் குடியுரிமைச் சான்று தானாகவே கிடைத்துவிடும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முடிவு செய்து உள்ளார். டிரம்ப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில்,  ‘வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குழந்தை பெற்று குடியுரிமை பெறுவது உலகத்திலேயே இந்த நாட்டில்தான் உள்ளது. இதுவொரு கேலிக்கூத்தான விஷயம். இதற்கு முடிவு கட்ட வேண்டும்’ என கூறியுள்ளார். 

இந்தியாவில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். வேலை, சுற்றுலா மற்றும் விருந்தினர் விசாவில் சென்று, அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் குடியுரிமையும் வாங்கி விடுகின்றனர். ஆயிரக்கணக்கானபேர் இவ்வாறு பலன் பெற்று உள்ளனர். இனி இது எடுபடாது. இந்த நடைமுறைக்கு அமெரிக்க அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறது

மூலக்கதை