பிரான்ஸ் நாட்டில் நடந்த பறக்கும் திருவிழா: பல்வேறு வடிவங்களுடன் பறந்த போட்டியாளர்கள்

தினகரன்  தினகரன்
பிரான்ஸ் நாட்டில் நடந்த பறக்கும் திருவிழா: பல்வேறு வடிவங்களுடன் பறந்த போட்டியாளர்கள்

பிரான்ஸ்: பிரான்ஸில் 150 விமான வீரர்கள் கலந்து கொண்ட பாராகிளைடிங் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது. பிரான்ஸ் நாட்டில் நடந்த இந்த பறக்கும் திருவிழா பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆல்ப்ஸ் மலைச்சாரலில்  நடந்த இந்த பறக்கும் போட்டியில் பங்கேற்றவர்கள் டிராகன், கார், விமானம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செய்து, அதனுடன் தங்களை இணைத்து, பாராசூட்டில் பறந்து சாகசங்கள் செய்தனர். இதில், வானவெளியில் பறந்து செல்லும் வீரர்களின் சாகசங்களை தாண்டி, ஆடை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதில் குறிப்பாக இங்கிலாந்து ராணி எலிசபெத் போன்று வேடமணிந்த பெண் ஒருவர் தன் பாதுகாவலருடன் பாராசூட்டில் பறந்து சென்றார். உலகம் முழுதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். காற்றின் வேகம் காரணமாக போட்டிகள் ஒருநாள் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டன.

மூலக்கதை