நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனவெறி தாக்குதல்

தினமலர்  தினமலர்

சிட்னி; ஆஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்.பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் பணி புரிந்த பெண் அதிகாரி ஒருவர் அவரை சோதனை செய்துள்ளார். அப்போது ஷில்பாவின் நிறத்தை கூறி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.ஷில்பாவின் லகேஜ் ஓவர் சைசாக இருப்பதாக கூறி தடுத்துள்ளார். இதனால் தான் பிடிக்க வேண்டிய மெல்போர் விமானத்தை தவற விட்டதாக ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி அந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இன்னும் வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான நிறவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு லண்டனில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பிரதர்ஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஷில்பா ஷெட்டியை அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸ் ஷில்பாவின் நிறத்தை வைத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் ஷில்பாவிடம் மன்னிப்புக் கோரினார்.

மூலக்கதை