பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா: அமெரிக்கா பாராட்டு

தினமலர்  தினமலர்
பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா: அமெரிக்கா பாராட்டு

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் பாதிப்பும், தாக்குதலும் தொடர்ந்து இருந்து வருவதாக பயங்கரவாதிகள் நிலை தொடர்பான அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான்


இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2017 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் பல தாக்குதலையும், தொல்லையும் கொடுத்துள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் , வடகிழக்கு மாநிலங்கள், இந்தியாவின் மத்திய மாநில பகுதிகள் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் உள்நாட்டு மாவோ., நக்சல்கள் மூலம் பாதிப்பை இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்சி இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா, அமைப்புகள் மூலம் துணைக்கண்டங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கையை தடுக்க பாகிஸ்தான் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
அதே நேரத்தில் இந்திய அரசு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்பட்டு வருகிறது. உள்நாட்டின் மாவோ., நக்சல்களை ஒழிப்பதில் இந்தியா திறம்பட செயல்பட்டுள்ளது. கடந்த 2017 ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் இடைய நடந்த பேச்சில் பயங்கரவாத ஒழிப்பில் இந்தியா பாராட்டும்படியான ஒத்துழைப்பை வழங்கியது. 2016 ஜூலை மாதம் நடந்த வங்கதேசம் டாக்காவில் நடந்த பேக்கரி தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி முகம்மது இட்ரீஸ் கோல்கட்டாவில் கைது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துக்காட்டாகவும் அமெரிக்கா மேற்கோள் காட்டியுள்ளது.

மூலக்கதை