சுற்றுச்சூழல் மாசு இல்லாத உலகின் முதல் அதிவேக ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில் ஓடும் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் மாசுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 140கி.மீவேகத்தில் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம்  நடத்தப்பட்டது. உலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைட்ரஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும். ரயில் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள், ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதன் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்சைடு  உருவாகாது.  "கொராடியா ஐலின்ட்" என்று இந்த ரயிலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியுமாம். அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில் எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும். இதுகுறித்து ரயில் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், "உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலக அளவில், இந்த ரயில் பெரும் புரட்சியை செய்யும்" எனத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில் ஓடும் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது.

மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் மாசுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 வழக்கமான ரயில்களைக் காட்டிலும் செலவு அதிகம் என்கிற போதிலும் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியாடாத ரயிலாக இருக்கும். இந்த ரெயிலை பிரான்ஸின் டிஜிவி அல்ஸ்டாம் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மணிக்கு அதிகபட்சமாக 140கி.மீவேகத்தில் ரயிலை இயக்க முடியும். முதல்கட்டமாக வடக்கு ஜெர்மனியில் உள்ள கக்ஸாஹெவன், பிரிமெர்ஹெவன், பிரிமெர்வோர்டே, பக்ஸிடிஹூட் ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம்  நடத்தப்பட்டது.

உலகிலேயே முதல்முறையாகச் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஓட உள்ள இந்த ரயில் முழுவதும் ஹைட்ரஜன் சக்தியால் இயங்கக்கூடியது. இந்த ரயிலில் லித்தியம் மின்கலன்கல் அமைக்கப்பட்டு இருக்கும்.

ரயில் ஓடத் தொடங்கியவுடன் இந்த பேட்டரியில் இருக்கும் எரிபொருள் செல்கள், ஹைட்ரஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து வேதியியல் மாற்றத்தில் ஈடுபட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதன் விளைவாக ரயிலில் இருந்து நீராவியும், சிறிய அளவிலான நீரும் வெளியேற்றப்படும். ஆனால் எந்தவிதத்திலும் கார்பன் டை ஆக்சைடு  உருவாகாது.

 "கொராடியா ஐலின்ட்" என்று இந்த ரயிலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு டேங்கர் ஹைட்ரஜன் மூலம் ஆயிரம் கி.மீ வரை ரயிலை இயக்க முடியுமாம். அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், அவை அனைத்தும் பேட்டரியில் சேமிக்கப்படும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற 14 ரயில்களைத் தயாரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. டீசல் ரயில் எஞ்சின்களை ஒப்பிடும் போது இந்த ரயில் மிகவும் விலை அதிகம் என்கிற போதிலும், பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீண்ட ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும், செலவும் டீசல் எஞ்சின்களோடு ஒப்பிடும்போது குறைவாகும்.

இதுகுறித்து ரயில் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஹென்ரி பாப்பார் லாபார்ஜ் கூறுகையில், "உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். 2021-ம் ஆண்டில் உலக அளவில், இந்த ரயில் பெரும் புரட்சியை செய்யும்" எனத் தெரிவித்தார்.

 

மூலக்கதை