வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகப் பொருட்கள்! அதிர்ச்சியில் மக்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
வாழைப்பழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகப் பொருட்கள்! அதிர்ச்சியில் மக்கள்

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்தில் ஒரு வாழைப்பழத்தில் உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனநலப் பிரச்சினை உள்ள ஒரு நபர் அதனை வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 
 
அந்தச் சம்பவம் குறித்து குவீன்ஸ்லந்துக் காவல்துறை ஆணையருக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக Sydney Morning Herald நாளிதழ் தெரிவித்தது. சம்பவம் தொடர்பில் குறிப்பிடத்தக்க தடயங்கள் கிடைத்துள்ளதாக ஆணையர் தெரிவித்தார். இருப்பினும் மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
 
அண்மையில் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் தையல் ஊசிகள் காணப்பட்ட சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. 

மூலக்கதை