இலங்கை கோயில்களில் விலங்குகள் பலியிட தடை

தினமலர்  தினமலர்

கொழும்பு: இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இந்து, முஸ்லிம் மத விழாக்களில் விலங்குகளை கொல்வதை எதிர்த்து விலங்கு உரிமை செயற்பாட்டாளர்களும், புத்தமத நிறுவனங்களும் குரல் கொடுத்துவந்தன.கடந்த ஆண்டு இந்துக்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் கோயில்களில் விலங்குகளைப் பலியிடத் தடை விதித்தது. அந்த தடை தங்கள் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாக விலங்குகளை பலியிடும் இந்து கோயில்களின் நிர்வாகத்தினர் வாதிட்டனர். பல நுாற்றாண்டுகால பலியிடும் வழக்கத்தை தொடர அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரி வந்தனர்.இந்நிலையில் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று இந்து கோயில்களில் விலங்கு பலிக்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்ததாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் ரஜித்தா சேனரத்னே தெரிவித்தார். பெரும்பான்மையான இந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை