iPhone X பழச்சாறு குடிக்கும் மக்கள்! வீடியோ இணைப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
iPhone X பழச்சாறு குடிக்கும் மக்கள்! வீடியோ இணைப்பு

நம்மில் பலர் பிடித்த பழத்தை அரைத்து பழச்சாறு செய்வதுண்டு.
 
ஆப்பிள் பழச்சாறு... ஆரஞ்சுப் பழச்சாறு... இவ்வரிசையில் புதிதாக ஒன்றைச் சேர்க்க முயன்றுள்ளார் இந்த YouTube பிரபலம்.
 
iPhone X கைத்தொலைபேசியை அரைத்து, அதனுடன் தண்ணீரைக் கலந்து அருந்த முயன்றார் இந்த ஆடவர்.
 
கலிஃபோர்னியாவில் இருக்கும் டாராஸ் மக்சிமுக் (Taras Maksimuk) இந்த சாகசத்தைத் தமது YouTube பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 
1,000 வெள்ளிக்கு மேல் விலையுயர்ந்த அந்தக் கைத்தொலைபேசியை அரைக்கும் இயந்திரத்தில் போடுகிறார் அவர்.
 
அரைக்கப்பட்ட கைத்தொலைபேசித் துகள்களைத் தண்ணீருடன் சேர்த்து அதனை LifeStraw எனப்படும் வடிகட்டும் உறிஞ்சிகுழல் வழி அருந்தி உமிழ்கிறார்.
 
மக்சிமுக், iPhone கைத்தொலைபேசிகளை 'வித்தியாசமான' வழிகளில் சோதிப்பது இது முதல்முறை அல்ல.
 
2016இல் உலகத்தின் ஆக உயரக் கட்டடமான பர்ஜ் கலிஃபாவிலிருந்து (Burj Khalifa) iPhone 7 Plus கைத்தொலைபேசியைக் கீழே எரிந்து சிதைத்தார் மக்சிமுக்.
 
 
 

மூலக்கதை