கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளை அவரது தொண்டை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக கொண்டாடவிருக்கிறார்கள்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளை அவரது தொண்டை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக கொண்டாடவிருக்கிறார்கள்..

வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 8 அன்று டெவவரில் நடைபெறும் கப்பலோட்டிய தமிழனின் பிறந்தநாள் விழாவில், குழந்தைகள், பெரியோர்கள் என அனைவருக்கும் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கலந்து கொண்டும், போட்டிகளில் பங்கேற்றும் சிறப்பிக்கவும். டெலவர் மாநிலத்தில் கீழ்காணும் முகவரியில் வரும் சனிக்கிழமை பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.

குழந்தைகள் பல்வேறு போட்டிகளும் இதில் நடத்தப்படவிருக்கிறது. குறிப்பாக ஓவியப்போட்டி, வினாடிவினா உள்ளிட்ட போட்டிகள் வயதுக்க் ஏற்ப மூன்று பிரிவுகளில் நடைபெறவிருக்கிறது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா 200, 150, 100, 75, 50 வெள்ளிகள் பரிசும், பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மூவருக்கு தலா 100, 75, 50 வெள்ளி பரிசும் வழங்கப்படவிருக்கிறது .

நாட்டின் விடுதலை மட்டுமல்லாது, “நம் நாட்டில் பெண்மக்களைச் சமைக்கும்,பிள்ளை பெறும் இயந்திரமாக அனைவருமே செய்துவிட்டோம். நம்மைப்போல் பெண்கட்கும் சம உரிமையிருத்தல் வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்களை ஆலோசித்து செய்தல் அவசியமாகும் என்று பெண்விடுதலை குறித்து, பெண்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து முழங்கியவர்.

தொடர்ந்து இதுபோன்ற மறக்காமல் போற்றப்படவேண்டிய தமிழ் சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களை நினைவுகூர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதில் டெலாவர் பகுதியைச் சார்ந்த திரு.துரைக்கண்ணன் மற்றும் குழுவினர் , தமிழ் அன்பர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள் ..

மூலக்கதை