ஒன்றுசேர்ந்து உடல்எடையைக் குறைப்போம் என்று கூறும் பிரதமர்..!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஒன்றுசேர்ந்து உடல்எடையைக் குறைப்போம் என்று கூறும் பிரதமர்..!!

சக பசிஃபிக் நாடுகளின் தலைவர்களைத் தம்முடன் உடல்எடையைக் குறைக்கும் போட்டியில் கலந்துகொள்ளச் சவால் விடுத்துள்ளார் டோங்கா நாட்டின் பிரதமர்.
 
உலகிலேயே பசிஃபிக் வட்டாரத்தில் தான் உடற்பருமன் பிரச்சினை ஆகக் கடுமையாக உள்ளது.
 
அந்த நிலைமையை மாற்ற வட்டார நாடுகளின் தலைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிறார் டோங்கா பிரதமர் அகிலிசி பொஹிவா.
 
ஓராண்டுக்கு உடல்எடையைக் குறைக்கும் போட்டியில் தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
ஓராண்டுக்குப் பிறகு தாங்கள் சந்திக்கும் போது யார் அதிகமாக எடையைக் குறைத்துள்ளார் என்பதைப் பார்க்கலாம் என்று சிரித்துக்கொண்டே கூறினார் டோங்கா பிரதமர்.
 
உலகச் சுகாதார நிறுவனத்தின் 2015 புள்ளிவிவரங்களின்படி ஆகக் கடுமையான உடற்பருமன் பிரச்சினை உள்ள நாடுகளின் பட்டியலில் பத்தில் 9 நாடுகள் பசிஃபிக் வட்டாரத்தைச் சேர்ந்தவை.
 
முன்பு பழங்கள், மீன், தேங்காய் என்று சாப்பிட்ட பசிஃபிக் வட்டார மக்கள் இப்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சோறு, நொறுக்குத் தீனி என உண்கின்றனர்.
 
அப்பகுதியில் உணவு, செழிப்பைக் குறிப்பதால் அதிகம் உண்பது பண வசதியைக் காட்டுவதாக நம்பப்படுகிறது.
 
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பசிஃபிக் உச்சநிலைச் சந்திப்பில் உடல்எடையைக் குறைக்கும் சவாலை அதிகாரபூர்வமாக முன்மொழியவிருப்பதாகக் கூறினார் திரு. பொஹிவா. 

மூலக்கதை