சீனாவின் யுனான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 6 ஆயிரம் வீடுகள் சேதம்.... 18 பேர் காயம்

தினகரன்  தினகரன்
சீனாவின் யுனான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 6 ஆயிரம் வீடுகள் சேதம்.... 18 பேர் காயம்

யுனான்: சீனா மற்றும் ஜப்பானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 18 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் 48 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாக கூறப்படுகிறது. மக்களுக்காக 200 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 600 மெத்தைகள் மற்றும் 1000 கம்பளிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஜப்பானின் சிபா  பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1ஆக இது பதிவாகி உள்ளது. இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

மூலக்கதை