உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்.,- இந்தியா பேட்டிங்

தினமலர்  தினமலர்
உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்றது பாக்., இந்தியா பேட்டிங்

மான்செஸ்டர்: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இன்றைய (16 ம் தேதி ) உலக கோப்பை லீக் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று மான்செஸ்டர், ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். உலக கோப்பை அரங்கில் கடந்த 6 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றது.இன்று 7வது முறையாக இரு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன.



இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் தமிழகத்தின் விஜய் சங்கர் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

மூலக்கதை