கொந்தளிக்கிறது..ஹாக்கலட்ஜெட்வர்டு

தினமலர்  தினமலர்
கொந்தளிக்கிறது..ஹாக்கலட்ஜெட்வர்டு

ஹாங்காங்:அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்ட மசோதாவை எதிர்த்து நடந்து வந்தப் போராட்டம், தற்போது, நிர்வாக அதிகாரிக்கு எதிராக திரும்பியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என, பல்லாயிரக்கணக்கான மக்கள், நேற்று சாலைகளில் திரண்டு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங், உலகின் மிகப் பெரிய வர்த்தக மையமாகும். சமீபத்தில், இங்கு, புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள், அவர்களுடைய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவர் என்ற, இந்த மசோதாவுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.'அரசியல் ரீதியில் பழிவாங்க, சீனாவின் துாண்டுதலால், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, எதிர்க்கட்சிகளும், பல்வேறு தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.இந்த போராட்டங்களைத் தொடர்ந்து, இந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக, ஹாங்காங்கின் பெண் நிர்வாக அதிகாரியான, கேரி லேம் அறிவித்தார். ஆனால், அதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.இந்த நிலையில், நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. பார்லியை முற்றுகையிட்டு நடந்த இந்தப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். 'மசோதாவை நிரந்தரமாக கைவிட வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக போலீசை ஏவி தாக்குதல் நடத்திய, தலைமை நிர்வாகி, கேரி லேம், பதவி விலக வேண்டும்' என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.இதற்கிடையே, இப்பிரச்னையால் ஏற்பட்டுள்ள மோதலுக்கும், மக்களின் பிரச்னைகளுக்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இவ்விஷயத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள இருப்பதாகவும், கேரி லேம் கூறியுள்ளார்.

மூலக்கதை