சீனாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலி

தினகரன்  தினகரன்
சீனாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 26 பேர் பலி

பீஜிங்: சீனாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 28 பேர் பயங்கர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் உள்ள ஹூனான் மாகாணத்தில் இருந்து ஹன்ஷூ மாகாணம் சாங்டே நகரை நோக்கி ஒரு பேருந்து புறப்பட்டு சென்றது. அதில் 53 சுற்றுலாப் பயணிகள், 2 ஓட்டுநர்கள், ஒரு சுற்றுலா வழிகாட்டி இருந்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பேருந்து தீப்பிடித்தது. இதில் 26 பேர் உடல் கருகி பலியானர். பயங்கர தீக்காயங்களுடன் 28 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஓட்டுனர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தீ விபத்து தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை கிழக்கு சீனாவில் உள்ள ரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 64 பேர் பலியாகி, 640 பேர் தீக்காயமடைந்த நிலையில், பேருந்து தீ விபத்தில் 26 பேர் பலியாகி இருப்பது வேதனை அளிப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலக்கதை