அமெரிக்காவில் நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவியேற்பு

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் பதவியேற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த நியோமி ஜெகாங்கிர் ராவ், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்று கொண்டார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் , சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதிபர் டிரம்ப், நியோமியின் கணவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
45 வயதாகும் நியோமி ராவ், டெட்டராய்ட் நகரில், இந்தியாவை சேர்ந்த ஜெரின் ராவ் ஜெஹாங்கிர் நரியோஷாங் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். ஜார்ஜ் மேசன் பல்கலைகழகத்தின் சட்டப்பள்ளியில் அரசியலமைப்பு, நிர்வாகம் ஆகிய துறைகளில் சட்ட பேராசிரியராக பணியாற்றினார்.
கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிபதியாக நியோமி ராவை, கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார்.

மூலக்கதை