சூறாவளியில் 1,000 பேர் உயிரிழந்ததாக அச்சம்!

PARIS TAMIL  PARIS TAMIL
சூறாவளியில் 1,000 பேர் உயிரிழந்ததாக அச்சம்!

ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் இடாய் (Idai) சூறாவளியால் மாண்டோர் எண்ணிக்கை 1,000க்கு மேல் உயரக்கூடும் என்று அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ளார்.
 
சூறாவளியால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
 
சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன், தகவல் தொடர்பும் தடைப்பட்டுள்ளது.
 
மொஸாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ரா (Beira) ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
 
ஸிம்பாப்வே, மொஸாம்பிக் இரண்டிலும் இதுவரை 160 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸிம்பாப்வே அரசாங்கம், சூறாவளியால் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் பேரிடர் நிலையை அறிவித்துள்ளது.
 
2000ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸிம்பாப்வேயைத் தாக்கியிருக்கும் ஆக மோசமான சூறாவளியாக இடாய் கருதப்படுகிறது.

மூலக்கதை