நியூசிலாந்தில் பீதியை ஏற்படுத்திய மர்ம பொதி - விமான நிலையம் மூடல்

PARIS TAMIL  PARIS TAMIL
நியூசிலாந்தில் பீதியை ஏற்படுத்திய மர்ம பொதி  விமான நிலையம் மூடல்

நியூஸிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள டியூன்டின் என்ற விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மர்ம பார்சல் ஒன்றினால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 
 
விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வாசல் ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க உடனடியாக பொலிஸார், மோப்ப நாய்களுடனும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் விமான நிலையத்துக்கு விரைந்தது சென்று சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
 
இதனால் ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் நகரில் இருந்து டியூன்டின் விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரு விமானங்கள் அருகாமையில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. 
 
இங்கிருந்து செல்ல வேண்டிய சுமார் 300 பயணிகளுக்கு நாளை மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், விமான நிலையத்தில் சோதனை நடப்பதால் அருகாமையில் இருக்கும் 86-வது தேசிய நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.
 
கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து இந்த மர்ம பொதி விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையினால் அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை