10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் விழா மையப்பொருள்:

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் விழா மையப்பொருள்:

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் மிகவும் பண்பட்ட ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் இதுவரை நம் சங்க இலக்கியங்களில் காணப்பட்டாலும் முதன்முதலாக அதற்கான அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் கொண்டிருக்கும் இடமே கீழடி. மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிற்றூரான கீழடியில் 2013 இல் தொடங்கப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய முடிச்சை அவிழ்க்கின்றன என்று சொல்லலாம். தமிழகத்தில் முன்பெல்லாம் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் முதுமக்கள் தாழிகளும், மட்பாண்டங்களும் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் தமிகத்தில் மக்கள் வாழிடங்களுக்கான சான்றுகள் இல்லையென்று சொல்லப்பட்டு வந்தது. தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் அகழாய்வு நடத்தப்பட்ட எந்த இடத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான கட்டிடச்சான்றுகள் கிடைத்ததில்லை. அதனை உடைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. மேலும் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவையென்றாலும் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் எல்லாமே, இந்த மண்ணில் வாழ்ந்த அரசர்களின் பெருமைகளைத் தாங்கிய ஆவணங்களாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்க்கையைச் சொல்பவையாக இருக்கின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்....

 

மேலும் விவரங்களுக்கு , விழாவில் கலந்துகொள்ள, அனைத்து அறிவிப்புகளுக்கும்  இணையதளத்தை பார்க்கவும். 


https://fetnaconvention.org/keezhadi/

மூலக்கதை