மீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்

தினகரன்  தினகரன்
மீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்

வாஷிங்டன்: நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், இந்த முறை விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களை நாட உள்ளதாகவும், ஆர்வமுள்ள நிறுவனங்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் அணுகுமாறும் அவர் கூறினார். நிலவின் வட்டப் பாதையில் ஒரு விண்வெளி நிலையத்தை 2026ஆம் ஆண்டிற்குள் கட்டமைக்க நாசா முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு முன்னதாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப வேண்டும் என்ற விண்வெளி கொள்கையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். இது கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் வேளையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூலக்கதை