உயிருள்ள மீனை விழுங்கிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
உயிருள்ள மீனை விழுங்கிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

நெதர்லாந்தில் உள்ள ஒரு இளைஞர் மது போதையில் உயிருள்ள மீனை விழுங்கிய நிலையில் பெரும் போராட்டத்துக்கு பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
 
நெதர்லாந்தின் Rotterdam நகரில் இளைஞர்கள் குழு ஒன்று மது அருந்திவிட்டு டி.வி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனை விழுங்கும் நிகழ்வு நடந்தது. அதைக் கண்ட இளைஞர்களில் ஒருவர் பெரிய மீன், பெரிய மீன் எனக் கத்திக்கொண்டே ஒரு டம்ளரில் கெளுத்தி மீனைப் பிடித்துக்கொண்டு கத்தினார்.
 
பின்னர் பீரை வாயில் ஊற்றி உயிரோடிருந்த மீனை விழுங்கிவிட்டார் பின்னர் பீரை மேலும் குடித்து மீனை முழுவதுமாக விழுங்க முயன்றும் முடியவில்லை.
 
10 விநாடிகளில் கடுமையாக வாந்தி எடுக்க ஆரம்பித்தார். தொண்டைக்குள் கையை விட்டு எடுக்க முயற்சித்தும் முடியவில்லை.
 
பின்னர் முதலுதவி என்கிற பெயரில் நண்பர்கள் அந்த இளைஞரை தலைகீழாக கால்களைப் பிடித்து தொங்க விட்டிருக்கின்றனர்.
 
ஆனால், இளைஞர் தலைகீழாகத் தொங்கும்போது மீன் மேல் நோக்கி உள்ளே சென்றிருக்கிறது. ஒரு கட்டத்தில் நிலைமை கை மீறிப்போய், ரத்தமாக வாந்தி வெளியேறவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அங்கு அவரது தொண்டையில் லாரிங்கோஸ்கோப் (laryngoscope) கருவியை வைத்துப் பரிசோதித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அப்போது மீன் போன்ற உருவம் தென்பட்டிருக்கிறது. அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தனர். அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொண்டார்.
 
இது குறித்து மருத்துவர் லிண்டா பெனோயிஸ்ட் கூறுகையில், நான் சந்தித்த விசித்திரமான நோயாளிகளில் இவரும் ஒருவர். மருத்துவமனையில் நோயாளி சேர்க்கப்படுவதற்கு முன்னரே உடலுக்குள் இருந்த மீன் இறந்திருந்தது.
 
மீனானது நுரையீரலுக்குள் போய் விட்டது. அதனால் கவனமாக அறுவை சிகிச்சை செய்தோம்.
 
வெளியில் எடுத்த மீனை பக்கத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் கொடுத்துவிட்டோம். இப்போது உயிரற்ற அந்த மீன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது என கூறியுள்ளார்.

மூலக்கதை