மலேசியாவின் புதிய மன்னர் யார்?: நாளை நடக்கும் முக்கிய கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவதாக தகவல்

தினகரன்  தினகரன்
மலேசியாவின் புதிய மன்னர் யார்?: நாளை நடக்கும் முக்கிய கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவதாக தகவல்

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னர் யார்? என்பதை முடிவு செய்வதற்காக நாளை முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியாவின் மன்னராக இருந்த சுல்தான் முகமது அண்மையில் தனது அரசு பதவியில் இருந்து விலகிக்கொண்டார். 50 வயதை கொண்ட மன்னர் தன்னை விட வயதில் குறைந்த ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்து கொண்டதால் சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய மன்னரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் நாளை தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக நாளை நடைபெறும் முக்கிய கூட்டத்தில் மன்னர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. மலேசியாவில் உள்ள 9 அரச பரம்பரைகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவர் பிரதம மந்திரி மகாதிர் மோகமத்தின் கூட்டணி அரசாங்கமாக அரியணையை ஏற்றுக்கொள்வர். அதிகார பதவி மாற்றத்திற்குப் பின்னர், நிறுவன மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். இதையடுத்து, புதிய மன்னரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை காலை 10.30 மணியளவில் இஸ்தானே நெகாராவில் தொடங்கும் பேரவை மாநாட்டின் சிறப்பு கூட்டத்தின் போது நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆட்சியமைக்க  5 வாக்குகள் பெரும்பான்மை பெற வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை