மெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்

தினகரன்  தினகரன்
மெசிடோனியா நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு..... போராட்டம் கலவரமானதால் பதற்றம்

ஏத்தன்ஸ்: மெசிடோனியா நாட்டின் பெயரை மாற்றும் உடன்படிக்கைக்கு கிரீஸ் அரசு கையெழுத்திட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மெசிடோனியா என்ற பெயரை அந்நாடு பயன்படுத்துவதற்கு கிரீஸ் நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மெசிடோனியா என்ற பெயரை வடக்கு மெசிடோனிய குடியரசு என்று மாற்றுவதற்கான உடன்பாட்டில் கிரீஸ் மற்றும் மெசிடோனிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். 27 ஆண்டுகளாக இரு நாட்டிற்கும் இடையே நீடித்து வந்த பெயர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புதிய பெயரில் மெசிடோனியா இடம் பெறுவதன் மூலம் கிரீஸ் அரசு உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டதாக அந்நாட்டு குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த பெயர் மாற்ற ஒப்புதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏதன்ஸ் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்றதால் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் உருவானதையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர்.

மூலக்கதை