செய்தி சில வரிகளில்...( உலகம்)

தினமலர்  தினமலர்

நிலநடுக்கம்: 2 பேர் பலி
சான்டியாகோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், நேற்று முன்தினம், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 6.7 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில், இருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.பஸ்கள் மோதி 22 பேர் பலிலாபாஸ்: தென் அமெரிக்க நாடான, பொலிவியாவில், சலாபட்டா என்ற இடத்தில், இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், 22 பேர் உயிரிழந்தனர்; 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
113 வயது தாத்தா காலமானார்
டோக்கியோ: கிழக்கு ஆசியாவில் உள்ள ஜப்பானில், ஹொக்கைடோ தீவை சேர்ந்த, உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த, மஸாஸோ நொனாகா, 113, நேற்று காலமானார். துாக்க நிலையில், மஸாஸோ உயிர் பிரிந்ததாக, அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
புயலில் சிக்கிய விமானம்
டெட்ராய்டு: அமெரிக்காவில், சிகாகோ நகரில் உள்ள விமான நிலையத்துக்கு, 129 பேருடன் வந்திறங்கிய விமானம், திடீரென வீசிய புயல் காற்றால் ஆட்டம் கண்டது. இருப்பினும், விமானத்தில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன. புயல் காற்றை தொடர்ந்து, சிகாகோவில் உள்ள விமான நிலையங்களில், 1,000 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காங்கோ அதிபராகிறார் பெலிக்ஸ்கின்

ஷாஷா: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் நடந்த பொதுத் தேர்தலில், 'பெலிக்ஸ் ஷிஷேகெடி வெற்றி பெற்றது செல்லும்' என, அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, காங்கோ அதிபராக, ஓரிரு நாளில் அவர் பதவி ஏற்க உள்ளார்.

'சீட் பெல்ட்' அணியாத இளவரசர்

லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான, பிலிப், 97, கார் விபத்தில் சிக்கி, உயிர் தப்பி, இரண்டு நாட்கள் ஆன நிலையில், நேற்று முன்தினம், 'சீட் பெல்ட்' அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து காரில் சென்றுள்ளார். அதை கவனித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அதுபற்றி, பிலிப்பிடம் எடுத்து கூறியுள்ளார்.

மாலியில் 8 பேர் பலி
பமாகோ: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், சாட் நாட்டை சேர்ந்த, ஐ.நா., அமைதிப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், எட்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தியர் மீது தாக்குதல்நியூயார்க்: அமெரிக்காவின் ஒரேகான் நகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த, இந்திய வம்சாவளி சீக்கியர், ஹர்விந்தர் சிங் மீது, அமெரிக்காவை சேர்ந்த ராம்சே, 24, கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெறுப்புணர்வால், ஹர்விந்தர் சிங்கை தாக்கியதாக, ராம்சே மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை