உதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம்

தினமலர்  தினமலர்
உதவும் மனப்பான்மை: இந்தியர்களுக்கு ஆர்வம் அதிகம்

டாவோஸ்: சர்வதேச அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் இந்தியர்கள் முன்னிலை வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


கருத்துக்கணிப்பு


உலக பொருளாதார அமைப்பு ஆன்லைன் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களிடம் , மற்ற நாடுகளுக்கு, உதவுவதில் தங்கள் நாடுகளுக்கு உள்ள பொறுப்புகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் கிடைத்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.


பயன்


இதில் கலந்து கொண்ட 95 சதவீத இந்தியர்கள், உதவி செய்வதற்கு சாகதமாக பதில் அளித்தனர். அடுத்த இடத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகள் உள்ளன. அந்நாட்டினர் 94 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த 87 சதவீதம் பேரும், நைஜீரியாவை சேர்ந்த 84 சதவீதம் பேரும்,சவுதி அரேபியாவை சேர்ந்த 83 சதவீதம் பேரும், சீனாவும் 80 சதவீதம் பேரும் உதவ ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில், கலந்து கொண்ட 80 சதவீதம் பேர், உதவி காரணமாக அனைத்து நாடுகளும் பயன்பெறும் எனக்கூறியுள்ளனர்.


நாட்டிற்கு நன்மை


குடியேற்ற விவகாரத்தில் தெற்கு ஆசியாவை தவிர்த்து, வட அமெரிக்கர்கள் சாதகமாக பதில் கூறியுள்ளனர். குடியேற்ற விவகாரத்தில் ஐரோப்பியர்கள் குறைந்தளவே சாதகமாக பதில் கூறியுள்ளனர். புலம்பெயர்தலால், நாட்டிற்கு நன்மையே என 63 சதவீத அமெரிக்கர்கள் கூறி உள்ளனர். இதேபோன்ற கருத்தை ஜெர்மானியர்கள் 48 சதவீதம் பேரும், இத்தாலியை சேர்ந்த 30 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். பல நாடுகள் இணைந்து செயல்படுவதால், முன்னேற்றம் காண முடியும் என 83 சதவீதம் அமெரிக்கர்களும், 35 சதவீத ஜப்பானியர்களும், 74 சதவீத பிரிட்டன் நாட்டவர்களும், 65 சதவீத பிரான்ஸ் மக்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மூலக்கதை